ராஷ்மிகா..
சமீபத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில், “நான் ஹைதராபாத் நகரை சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவர் என்று நினைக்கிறன்,
நன்றி” என ராஷ்மிகா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் தான் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்று அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணம் தொடர்பாக ஹைதராபாத்தில் இருந்து வந்ததாக ராஷ்மிகா கூறினாரா? அல்லது தனது சொத்து ஊர் ஹைதராபாத் என குறிப்பிட்டாரா என தெளிவாக தெரியவில்லை.
ஆனால், அவர் பேசிய விதத்தை வைத்து பார்க்கும்போது, அவர் தனது சொந்த ஊர் ஹைதராபாத் என கூறியது போல் தான் தெரிகிறது என கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
விராஜ்பேட், கோடகு மாவட்டம் கர்நாடகாவில் உள்ளதா அல்லது ஹைதராபாத்தில் உள்ளதா? சொந்த ஊரை மறந்துவிட்டாயா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் பெரும் சர்ச்சையில் ராஷ்மிகா சிக்கியுள்ளார். இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.