உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜோதிகா!!

108

ஜோதிகா..

நடிகை ஜோதிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

டாப் நாயகியாக இருந்த போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இரண்டு குழந்தைகளை பெற்றவர் அவர்களை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

அவர்கள் கொஞ்சம் வளர்ந்த நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

பார்க்க கொஞ்சம் குண்டாக காணப்பட்ட நடிகை ஜோதிகா இப்போது சுத்தமாக உடல் எடையை குறைத்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.