ஸ்ரீலீலா..
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ஸ்ரீலீலா. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர் பின் தனது நடனத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார்.
புஷ்பா 2 படத்தில் அவர் ஆடி இருந்த கிஸிக் பாடல் அதிகம் வைரல் ஆகி இருந்தது. தமிழ் சினிமாவில் இவருடைய வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்து ஸ்ரீலீலா நேரடியாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகி ஒரு படம் நடித்து வருகிறார். அவர் Aashiqui 3 படத்தில் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீலீலா சுத்தமாக மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேக்கப் இல்லாமலும் அவர் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.