“உன் அம்மா மேல இப்படி தான் கை வைப்பியா?” மறுபடியும் சேரனை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்..!

407

சேரனை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்…

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது.

Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார்.

மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். தற்போது மீண்டும் கமல்ஹாசனையும், சேரனையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.

என்ன பிரச்சனை என்றால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது ஒரு டாஸ்கில் சேரன் அவர்கள் தன் மீது தொடக்கூடாத இடத்தில் தொட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் இது பொய் என்று நிரூபிக்க நடிகர் கமல்ஹாசன் ஒரு குறும்படமாக எடுத்து மீராமிதுனின் நாடகத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சேரன் இடுப்பு பகுதியில் கை வைத்தார் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“நீங்களே பாருங்கள் சேரனின் கை எங்கே இருக்கிறது? அவங்க அம்மாவா இப்படி தான் பிடிப்பாரா..? இதைவிட வேறு என்ன ஆதாரம் உங்களுக்கு வேணும்? அதுமட்டுமல்லாமல் இதற்கு சாட்சியாக சாண்டியும் உள்ளார்?

ஆனால் சாண்டியும் எனக்கு ஆதரவாக இல்லை. அது மட்டுமல்லாமல் தன்னுடைய கௌரவத்தை கொச்சைப்படுத்தியது இந்த நிகழ்ச்சி தான்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.