பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ?
முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி விஜய் டிவிக்கு வந்தார்,
அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த ரியோ சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்தார்.
மறுபடியும் 5ல் குரு பார்க்க சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி நடித்தார். இந்த படம் சிவகார்த்திகேயனை கையை சுட்ட நிலையில்,
தற்போது ‘பானா காத்தாடி’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தநிலையில், கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், சூர்யாதேவி, எலிசபெத் ஹெலன், புகழ், கிரண் ரத்தோட், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.