லீக் ஆனது மாஸ்டர் படத்தின் முழு கதை- தளபதி ரசிகர்கள் ஷாக்..!

432

லீக் ஆனது மாஸ்டர் படத்தின் முழு கதை…

மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் தான் மாஸ்டர். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மிகவும் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

ஆனால் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் கசித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்தின் கதை :

தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது வகுப்பு நடக்கும் நேரங்களிலும் கல்லூரிக்குள் இருக்கும்போதும் குடி கூத்து என அலப்பறை செய்து வருகிறார்.

அதே கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் நடிகை மாளவிகா மோகனன், விஜய்யின் இந்த கெத்தை பார்த்து, அவர் மீது காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையால் விஜய்யின் மீது பழி போடப்படுகிறது.

விஜய்யின் குடிப்பழக்கம் தான் இந்த மொத்த பிரச்சனைக்கும் காரணம் என கல்லூரியை விட்டு நீக்கி விடுகின்றனர். இதன் பிறகுதான் அனாதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் ஹாஸ்டல் வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.

அங்கிருக்கும் பல சிறுவர்கள் போதைக்கு அடிமையானதையும், போதைப்பொருள்கள் விற்பதையும் கண்டு பிடிக்கும் விஜய், அதை யார் செய்வது, இதற்கு பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க துப்பறிய முயற்சிக்கிறார்.

குழந்தைகளுக்கு நேரடியாக போதை பொருட்களை விற்கும், நபராக இருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸை முதலில் பிடித்து, அதன் மூலம் அதற்கெல்லாம் காரணம் அர்ஜுன் தாஸ் அண்ணன் நடிகர் விஜய் சேதுபதி தான் என்பதையும் விஜய் கண்டுபிடிக்கிறார்.

இறுதியில் இதை எப்படி ஒழித்து கட்டுகிறார் என்பதைப்போல தான் இப்படத்தின் கிளைமாக்ஸ் என தெரிவிக்கின்றனர்.

இதில் வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் மேக்கிங் ஸ்டைல், அதிரடி திரைக்கதை, சண்டைக்காட்சிகள் என படம் முழுக்க பரபரப்பாக இருக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த கதை இணையத்தில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் கதைதான் மாஸ்டர் படத்தின் கதை என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவர வில்லை என்றாலும் கசிந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் விஷயங்கள் இதுவரை அவ்வளவாக வெளியாகாமல் இருந்த நிலையில் கதை லீக் ஆகியிருப்பது ரசிகர்களுக்காக ஷாக்கிங்காக உள்ளது.