பிக்பாஸ் ஜூலி..
பிக்பாஸ் நிகழ்ச்சி பல போட்டியாளர்களின் வாழ்க்கையில் புது மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், ஆரம்பத்தில் இருந்ததைவிட ஆடை, அணிகலன் விஷயத்தில் சற்று வேறுபட்டு மாறிவிடுவார்கள்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் ஜூலி.
நிகழ்ச்சியில் சில விஷயங்களால் மக்கள் வெறுப்பை சம்பாதித்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல இடங்களில் அவமதிக்கப்பட்டார். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஜூலி, மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.
இதன்பின் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஜூலி, டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.