நடிகர் விஜயின் மாஸ்டர் படம் OTT-யில் ரிலீஸா..? : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

333

மாஸ்டர் படம் OTT-யில் ரிலீஸா..?

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இதனால், தொற்றிற்கு முன்பாக, எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக புலம்பி வருகின்றனர்.

இந்த சூழலில், வேறு வழியில்லாமல் ஓடிடி என்னும் ஆன்லைன் தளத்தில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் கடந்த ஆக.,14ம் தேதியே வெளியாவதாக இருந்தது.

ஆனால், கொரோனா பேரிடர் காரணமாக படம் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தீபாவளிக்கு கட்டாயம் மாஸ்டர் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.

விஜயின் குரலில் குட்டி ஸ்டோரி பாடல் படு ஹிட்டாகி இருப்பதால், அந்தப் பாடலை திரையரங்கில் வெளியாகும் போது, பட்டைய கிளப்ப வேண்டும் என ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களின் இந்தக் கனவு காணாமல் போய் விடும் விதமாக, புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் தேதி முடிவாகவில்லை. எனவே, மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிட அப்படத்தின் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகி வரும் இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்ட போது, “பெரிய படங்களின் படக்குழுவினருடன் ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இதுபோன்ற தகவல்கள் வெளியாவது சகஜம்தான். ஆனால், மாஸ்டர் படத்தை பொறுத்த வரையில், படம் கட்டாயம் திரையரங்கில்தான் வெளியாகும்,”எனக் கூறினர்.