ஜாக்குலினை காக்க வைத்த வெள்ளித்திரை : மீண்டும் அழைத்துக் கொண்ட சின்னத்திரை!!

1065

ஜாக்குலின்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக தொலைக்காட்சி ஏரியாவில் அறிமுகமான ஜாக்குலினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு என்று பல ரசிகர் ஆர்மிகள் உருவாகியுள்ள நிலையில், அம்மணிக்கு வெள்ளித்திரை அழைப்புகளும் ஏராளமாக வர தொடங்கியது.

இதையடுத்து நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஜாக்குலின், சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுக்க காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் எதுவுமே அவரை தேடி வரவில்லை.

வரும் வாய்ப்புகள் அனைத்தும் உப்புமா படங்களாகவும், அல்லது ஹீரோயின் தங்கை, தோழி என்ற குணச்சித்திர வேடங்களாகவே வந்ததால் அம்மணி நொந்து போய்விட்டால்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்திற்குப் பிறகு, சுமார் ஒரு வருடமான சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த ஜாக்குலினுக்கு இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காததால், வெறுத்துப் போனவர் தற்போதும் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘தேன்மொழி பி.ஏ’ என்ற புதிய தொடரில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் ஜாக்குலின் நடிக்கிறார். இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.