பிக்பாஸ் சாண்டிக்கு வெளியில் ஜெயில் காத்திருக்கிறது : வசந்ததபாலனால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

1241

பிக்பாஸ் சாண்டி

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபராக இருப்பவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் அந்த இடத்தில் இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று போட்டியாளர்கள் பலரும் சொல்லியிருக்கார்கள்.

ஆனால் அதுவே சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது என சேரன் சார் சமீபத்தில் கமலிடம் நேரடியாக கூறினார். இதனால் சாண்டி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறே என்று அதை கூட தன்னுடைய தொனியில் சொன்னார்.

இந்நிலையில் வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத் தலைவன் படங்களை இயக்கிய வசந்த பாலன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், வென்று வாருங்கள், உங்களுக்கு ஜெயில் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இதைக் கண்டவுடன் ஷாக் ஆன சாண்டி ரசிகர்கள், அதன் பின் அதை படித்து பார்த்த போது, அவர் இயக்கி வரும் ஜெயில் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதில் நடன இயக்குனராக சாண்டி பணியாற்றியுள்ளார்.

அவர் வெளியில் வரும் போது ஜெயில் படம் ரிலிசாகவுள்ளதால், அதை குறிக்கும் வகையிலே வெளீயில் வாருங்கள் சாண்டி ஜெயில் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…