சேரன் மீது பொய் புகார் கூறியது போல பிரபல நடிகர் மீது பழி சுமத்திய மீரா : அவரே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

1106

சேரன் மீது பொய் புகார்

மீரா மிதுன் சைக்கோ என்றும், அவர் உண்மை முகம் குறித்தும் நடிகரும் அவருடன் நடனமாடியவருமான சய்ஃப் அலி கான் பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸில் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் சென்ற வாரம் குறைந்த வாக்குகளால் வெளியேறியுள்ளார். இந்நிலையில் மீரா குறித்து ஜோடி No.1ல் அவருடன் சேர்ந்து நடனமாடிய சய்ஃப் அலி கான் பேசியுள்ளார்.

சய்ஃப் கூறுகயில் நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வேறொரு நபருடன் ஆடுகையில் அவர் அந்த ஷோ வை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் மீரா எனக்கு ஜோடியாகி என்னுடன் சேர்ந்து நடனமாடினார்.

அப்போது ஒரு நாள், நடன ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் திடிரென்று என்னை விட்டு தள்ளி போய்ட்டார். காரணம் நான் அவரை தவறாக தொட்டு நடனமாடினார் என்று அங்குள்ள சகப் போட்டியாளர்கள் மத்தியில் கூறினார்.

அப்போது அந்த வார்த்தை அதிர்ச்சியை அளித்தது, நான் தலை குனிந்து போனேன். அதே போல் தான் பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கும் நடந்துள்ளது. அவரின் பேச்சு ஒரு சைக்கோ போல இருந்தது என கூறியுள்ளார்.