சரவணன்
சென்ற சனிக்கிழமை பிக்பாஸ் எபிசோடில் கமல்ஹாசன் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் பேசிய சரவணன் ‘நானும் இப்படி செஞ்சிருக்கேன் சார்’ என கூறினார்.
அதற்கு கமல்ஹாசனும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. செட்டில் இருந்த ரசிகர்களும் கைதட்டினார். இது பெரிய சர்ச்சையான நிலையில் விஜய் டிவி நடவடிக்கை எடுத்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிப்பு கேட்கும்படி பிக்பாஸ் கூறினார்.
அப்போது பேசிய சரவணன் “நான் காலேஜ் படிக்கும் வயதில் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அது போல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதும் பேச முடியாமல் போனது. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறியுள்ளார்.