பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் யார்?.. பிரபல ரிவி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

344

பிக்பாஸ்…

பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் என நாள்தோறும் ஒரு தகவல் பரவி வரும் நிலையில் விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட்டாக உள்ளது.

பிக்பாஸ் 4 தொடங்குவது உறுதியாகிவிட்ட நிலையில் அதுதொடர்பான தகவல்கள்தான் தீ யாய் பரவி வருகிறது.

குறிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் போகப் போகும் அந்த 16 போட்டியாளர்கள் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஷாலு ஷம்மு மற்றும் பிரபல ரிவியில் பிரபலமான ரியோ ராஜும் பிக்பாஸ் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விஜய் டிவி பெயரில் அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘பிக்பாஸ் சீசன் – 4ன் அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில், 40 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

முதல் சீசனில், ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என்றும்; இரண்டாவது சீசனில், ‘நல்லவர் யார், கெட்டவர் யார்’ என்றும், மூன்றாவது சீசனில், ‘இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைப்’ என்றும்; இந்த சீசனில் ‘தப்புனா தட்டிக் கேட்பேன், நல்லதை தட்டிக் கொடுப்பேன்’ என்றும், கமல் பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது.

அக்டோபர் முதல் வாரம் நிகழ்ச்சி துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு, அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்கும். பங்கேற்பாளர்கள், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.