சில்லுன்னு ஒரு காதல் திரைபடத்தில் பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா ?

553

சில்லுனு ஒரு காதல்…..

சில்லுனு ஒரு காதல் படத்திற்கு முன், சூர்யாவின் படங்கள் ஆண்களை மட்டுமே கவர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக பெண்கள் மத்தியில் சூர்யாவை கொண்டு சேர்த்த படம் தான் சில்லுனு ஒரு காதல்.

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகே ஜோதிகாவை மணந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக இவரது மனைவி ஜோதிகா மற்றும் பூமிகா என இருவரும் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் வரும் “முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம்” என்ற பாடல்கள் ஆனது மெகா ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் பல காதலர்களின் ரிங்டோனாக அமைந்தது. தற்போது இந்த திரைப்படத்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் பூமிகாவுக்கு பதிலாக முதலில் பிரபல நடிகை அசின் தான் நடிக்க இருந்தாராம். அதன் பின் தன் இந்த படத்தில் பூமிகா இணைந்ததாக கூறப்படுகிறது.