பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது 12 பேர் தான் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. வேற லெவலில் வனிதா மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், முதல் வாரத்தில் எவிக்ஷன் இல்லையென்ற நிலையில், அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இரண்டாவது வாரத்திலிருந்து எவிக்ஷன் ஆரம்பித்ததால் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.
அதில், லோஸ்லியா யாரை நாமினேட் செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், நிகழ்ச்சி தொடங்கிய தினத்திலிருந்தே லோஸ்லியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனால் அவர் யார நாமினேட் செய்வார் என்பதை எதிர்பார்த்தனர்.
அதன்படி, அவர் நாமினேட் செய்தவர்கள் தான் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆம், மூன்றாவது வாரத்தில், வனிதாவையும், அடுத்து மோகன் வைத்தியாவையும், சென்ற வாரத்தில் மீராவையும் நாமினேட் செய்திருந்தார்.
அவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை லோஸ்லியா ஆர்மி வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். அதுபோல, இந்த வாரத்தில், சாக்ஷியையும், மதுமிதாவையும் நாமினேட் செய்துள்ளார். இந்நிலையில், இந்த வாரம் கண்டிப்பாக் சாக்ஷி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.