24 மணி நேரம் என்னையே சுத்தி வந்த கவீன் எங்கே? நள்ளிரவில் அவள் கூட என கண்கலங்கிய ஷாக்சி!!

1076

கண்கலங்கிய ஷாக்சி

பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒன்று செய்து, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிவிடுகிறார். அது போன்று தான் மொட்ட கடிதாசி என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்து, அதில் போட்டியாளர்கள், மற்ற போட்டியாளர்களிடம் என்ன கேட்க விரும்புகிறீர்களோ கேளுங்கள் என்று கூறியிருந்தார்.

அதன் படி மொட்டக் கடிதாசியில், லாஸ்லியா, ஷாக்சிக்கு, கவீனுடன் பிரச்சனை இருக்கு என்று கூறும் அவர் அதன் பின் அவரிடம் பிரச்சனை முடிந்துவிட்டது என்று கூறி, சகஜமாகிவிட்டு, அதன் பின் பிரச்சனையை பற்றி கூறுவது ஏன்? உங்களுக்கும் கவீனுக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை என்று எழுதியிருந்தார்.

இந்த கடிதம் வந்தவுடன், ஷாக்சி, நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன், எனக்கு ஒரு ஆண் நண்பனாக அறிமுகமானது கவீன் தான், அதன் பின் லாஸ்லியா, இவர்கள் இருவரிடமும் நான் அந்த அளவிற்கு பழகி இருக்கிறேன்.

என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை பலவற்றை கூறியிருக்கிறேன். அதன் பின் கவீன் என்னிடம் தொடர்ந்து பேசி வந்தான். என்னுடன் இருந்தவர்கள் அதாவது ஷெரீன் கூட, கவீன் ஏன் ஷாக்சி கூட 24 மணி நேரமும் இருக்க, கொஞ்சம் பிரியா விடு என்று கேட்டார்.

அப்படி எல்லாம் இருந்த கவீன், கமல் சார் எபிசோடுக்கு பின் ஒரே இரவில் முற்றிலும் மாறிவிட்டான். நான் அன்றைய தினம் மனம் நொந்து அழுது கொண்டிருக்கிறேன், அப்போது அவன் லாஸ்லியாவிடம் நள்ளிரவில் சென்று அதிகம் நேரம் பேசிக் கொண்டிருக்கிறான்.

அதுமட்டுமின்றி நான் அதிலிருந்து மீள்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, அவளும், அவனும் கையை பிடித்து செல்கின்றனர், கொஞ்சுகின்றனர். எனக்கு இதை எல்லாம் பார்க்கும் போது எப்படி இருக்கும்.

எனக்கு கொஞ்சம் கூட அவன் மதிப்பு தரவில்லை, அதன் பின் நான் சகஜமானேன் தான், ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை, என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளவேயில்லை என்று கண்கலங்கிய படி கூறினார்.