6 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை : கணவர் செய்த மோசமான செயல்!!

1097

அலினா ஷேக்

சினிமா நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். போஜ்புரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை அலினா ஷேக். கடந்த 2016 முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் அவர் தன் கணவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிதில் எனது கணவர் வீஇரவு 8 மணிக்கு திரும்பி வருவேன் என கூறிவிட்டு வெளியில் சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் என் கணவரை காணவில்லை என புகார் செய்தேன். பின் அவர் நலமாக இருப்பது தெரியவந்தது. பின் 10 நாட்கள் கழித்து எனக்கு ரூ 100 பத்திரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.

இதனால் அதிர்ச்சியைடந்த நான் விவாகரத்தை ஏற்கமுடியாது என்பதால் போலிசில் புகார் அளித்தேன். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்திவிட்டார்கள்.

அதே போல நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரின் வீட்டில் இருந்தவர்கள் தொடர்ந்து கொடுமை செய்து வந்தனர். இன்னும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். புகார் கொடுக்க முயன்ற போது கணவர் என்னை தடுத்துவிட்டார் என அலினா கூறியுள்ளார்.