பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மதுமிதா உண்மையில் யார் தெரியுமா? யாருக்கும் தெரியாத தகவல்கள்!!

1209

மதுமிதா

பிக்பாஸ் வீட்டில் சகப் போட்டியாளர்களுல் ஒருவரான ஜாங்கிரி மதுமிதா சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 12 போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் திட்டுவதும் புறம் பேசுவதுமாய் இருக்கிறார்கள்.

மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால் தான் நமக்கு தெரியும் அளவிற்க்கு ஒகே ஒகே படத்தில் சந்தானத்துடன் நடித்திறுப்பார். ஜாங்கிரி மதுமிதா 83-ம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்துள்ளார்.

மதுமிதாவிற்க்கு சிறு வயதிலேயே காமெடி மற்றும் நடிப்பில் நாட்டம் உள்ளதால் 2004-ல் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்சியில் கலந்துக்கொண்டார். பின் 2010-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான மாமா மாப்பிள்ளையில் அனுஷ்கா என்னும் கதாபாத்திர்த்திலும், பின் பொண்டாட்டி தேவை என்னும் சிரிப்பு மெகாத் தொடரில் நந்தினி என்னும் கதாபாத்திர்த்தில் நடித்துள்ளார்.

அதன் பின் 2010-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான அத்திப்பூக்கள் என்னும் மெகாத் தொடரில் பானு என்னும் கதாப்பாத்திரத்திலும் சித்ரா என்னும் கதாப்பாத்திரத்தில் அழகியிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் சிரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2012-ல் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்னும் செல்ல பெயரில் சந்தானத்திற்கு ஜோடி யாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பின் 2012-ல் ஜீ தமிழில் மை நேம் ஸ் மங்கம்மா என்னும் சீரியலில் சீதா என்னும் கதாப்பாத்திரத்திலும், பின் 2013-ல் கலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவனில் கௌசல்யா என்னும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

2014-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா-3 ல் பப்பு வாக நடித்திருக்கிறார். சமிபத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருடன் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்க்கு சொந்தக் காரியாக நடித்திருப்பார்.

இதற்கிடையில் பட வாய்ப்புகள் வர வர அதிலும் காமெடி ரோலில் வெளுத்துக் கட்டி வருகிறார் ஜாங்கிரி மதுமிதா. சமிபத்தில் தான் நம் மதுவிற்க்கு தன் தாய்மாமாவின் மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயல் என்பவருடன் இந்த வருடம் பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணமான 4 மாதத்திற்க்குள் விஜய் டிவியில் ஒளிப்பரபாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் ரியலிட்டி ஷோ வில் போட்டியாளராக பங்கேற்று சிறப்பான முறையில் விளையாடிக் கொண்டு வருகிறார்.