சேரன் – சரவணன் சண்டையால் பற்றி எரியும் பிக்பாஸ் வீடு : மதுமிதா மூக்கை உடைத்த சாண்டி!!

1047

மதுமிதா மூக்கை உடைத்த சாண்டி

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரேநாளில் ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கும் என்றே தோன்றுகிறது. சரவணனுக்கும் சேரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையால் பிக்பாஸ் வீடு பற்றி எரிகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரேநாளில் ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கும் என்றே தோன்றுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சேரனுக்கு பின்னால் பேசி, திட்டி வந்த சரவணன் இன்று சேரனை நேருக்கு நேராக தரக்குறைவாக பேசிவிட்டார். இன்று சேரனை போயா வாயா என்றும் போடா வாடா என்றும் கேவலமாக பேசினார் சரவணன்.

சாண்டியிடம் சேரனை கை காண்பித்து அவர் லூசு மாதிரி பேசி வருகின்றார் என்று கூறுகிறார் சரவணன். அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் தர்ஷன், லூஸ் என்ற வார்த்தையெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். மேலும் அவர் அவருடைய ஒபினியனைதான் சொல்கிறார் என்றும் சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் தர்ஷன்.

அப்போது நீங்கள் லுசு என்று என்னை கூறினீர்கள் ஏன் அப்படி பேசுகிறீர்கள், லூசு, போயா வாயா, போடா வாடா என்று பேச வேண்டிய அவசியம் இல்லை என மிக பொறுமையாக கூறுகிறார் சேரன்.

உடனே உங்களை சொல்லவில்லை என மாற்றி பேசுகிறார் சரவணன். நீங்கள் என்னைதான் சொன்னீர்கள் என்று சேரன் கூற, உன்னை சொல்லவில்லை என்று குரலை உயர்த்திய சரவணன், நீ நீ என்றும் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசினார்.

ஏன் நீ என்று மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள் என்று சேரன் கேட்க அப்படிதான் பேசுவேன் என்று திமிராக சொல்கிறார் சரவணன்.இதனால் நொந்துபோன சேரன், அப்படி பேசாதீங்க அண்ணே என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறார்.

அடுத்த வாரத்துக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெறுகிறது. முகென், சாண்டி, மதுமிதா ஆகியோர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். பனி சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்கேட்டர்களை மூவரும் வரிசையாக காலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

போட்டியில் வெற்றி பெற என்ன யுக்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார். சாண்டி மற்றும் முகெனின் ஆக்ரோஷமான சண்டையில் இடையே மாட்டிக்கொண்டு மூக்கில் காயமடைகிறார் மதுமிதா. இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பாகிறது.