வாடா போடா என கூறிய சரவணன் : சேரனுக்கு ஆதரவாக பொங்கியெழுந்த பிரபல காமெடி நடிகர்!!

1535

சரவணன்

நேற்று பிக்பாஸ் வீட்டில் சரவணன்- சேரன் இடையே பெரிய சண்டை மூண்டது. சேரனை தரக்குறைவான வார்த்தைகளால் சரவணன் திட்டிய பொது பிஸ்போஸ் வீட்டில் உள்ள அனைவரும் பொங்கி எழுந்தனர்.

அதேசமயம் சேரனுக்கு ஆதரவாக பலர் சமூக வலைத்தளங்களில் பொங்கியெழுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பிரபலமான நடிகர் பயில்வான் ரங்கநாதன். பிக்பாஸில் சேரன் படும் வேதனைகளை குறித்து பேசியுள்ள அவர், சேரனுக்கு பட வாய்ப்பு இல்லை என்றால் சீரியலில் நடிக்கலாம், அப்பா கேரக்டரில் நடிக்கலாம்.

அதையெல்லாம் விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்படி அவமானப்பட்டு சீரழிய வேண்டுமா? சரவணன் போன்ற ஆட்களிடம் வாடா போடா போன்ற வார்த்தைகளை அவர் கேட்க என்ன தலையெழுத்தா?

ஆட்டோகிராப் போன்ற திரப்படங்களை கொடுத்துவிட்டு சேரன் இப்படி சீப்பாக அசிங்கப்படுவதை பார்க்கமுடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.