மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை CSK அணியுடன் இணைத்து கொச்சைப்படுத்திய நடிகை கஸ்தூரி!!

1197

80,90களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போதும் பல படங்களில் கவர்ச்சி வேடம், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு தனது குரலை வலுவாக கொடுத்து வருகிறார். ஆனால் இவரது ஒரு சில கருத்துகள் முகம் சுளிக்கும் விதமாக அமைகின்றன.

அப்படி தான் தற்போது KKR அணிக்கு எதிராக மிகவும் நிதானமாக விளையாடி வந்த CSK அணியை பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர் நடிகை லதாவை தடவுவதை விட அதிகமாக தடவி கொண்டு ஆடி கொண்டிருக்கிறார்களே என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.