நடிகர் ஜே.கே ரித்தீஷின் மனைவிக்கு மிரட்டல் விடும் நண்பர்கள் : முடிவுக்கு வராத சொத்துப்பிரச்சனை!!

980

ஜே.கே.ரித்தீஷ்

திரைப்பிபலமும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷின் மனைவிக்கு ரித்தீஷின் நண்பர்களால் பல மிரட்டல்கள் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.பியும்மான ஜே.கே.ரித்தீஷ் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். ரித்தீஷின் மறைவுக்கு பிறகு அவரது மனைவிக்கு அவரது நண்பர்களால் நிறைய மிரட்டல் வருவதாக ரித்தீஷின் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

ரித்தீஷின் நண்பரான பாவா என்பவர் ரித்தீஷ் மனைவிக்கு கொ லை மிரட்டல் விடுவதாக கூறப்படுகின்றது. அதாவது கடந்த ஜனவரி மாதம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளிக்கூடம் மற்றும் சில வீடுகளை சுப்பிரமணி என்பவரிடம் இருந்து வாங்க ரித்தீஷ் ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

இதற்காக சுமார் 4 கோடி ரூபாய் வரை சுப்பிரமணிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். இந்த சொத்தை வாங்குவதற்கு முன்பே ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டதால், சுப்பிரமணியிடம் கொடுத்த முன்பணத்தை ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரி கேட்டுள்ளார்.

இதற்கு அந்த பணத்தை ஜோதிஸ்வரியிடம் கொடுப்பதாக சுப்பிரமணியும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த 25 கோடி மதிப்பிலான சொத்தை ரித்தீஷின் நண்பரான ஆதம்பாவா அபகரிக்க முயல்வதாக ஜோதிஸ்வரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் ரித்தீஷின் நண்பர் ஆதம்பாவா திடீரென திருவான்மியூர் மற்றும் தியாகராயநகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தனக்கு கொ லை மிரட்டல் விடுத்ததாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார். மேலும், தனது கணவனின் சொத்துகளை அபகரிக்க நினைப்பதாகவும் அதனால் கடும் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.