தந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

1120

பாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி சல்மான் கான், ஆலியா பட்டை வைத்து இன்ஷா அல்லாஹ் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஆலியா சல்மான் ஜோடியாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலரும் விமர்சிக்கத் துவங்கினர்.

53 வயதாகும் சல்மான் கானுக்கு 26 வயதாகும் ஆலியா பட் ஜோடியா?. அப்பாவும், மகளும் சேர்ந்து நடித்தது போன்று இருக்கும். பன்சாலி ஏன் இப்படி ஒரு ஜோடியை தேர்வு செய்துள்ளார் என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. சொல்லப் போனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. சல்மான் அல்லது பன்சாலி சாரும் அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் ஆலியா.