ஷெரீனிடம் காதலை சொன்ன தர்ஷன்
பிக்பாஸ் வீட்டில் நேற்றுஆண்கள் பெண்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட ஆண் போட்டியாளர்கள் குறிப்பிட்ட பெண் போட்டியாளர்களிடம் தங்களுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
அப்படி வெளிப்படுத்தப்படும் போட்டியாளர்களுக்கும் சிறப்பு அவார்ட் ஒன்று கொடுக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவித்தார். அதன் படி தர்ஷன் தன்னுடைய தோழியான, ஷெரீனிடம் அன்பை அற்புதமாக வெளிப்படுத்தி, சிறப்பாக அன்பை வெளிப்படுத்தியவர் என்ற விருதை பெற்றார்.
வெற்றி பெறும் நபர் தங்கள் வாழ்வில் சந்தித்த முதல் அன்பின் வெளிப்படுத்துதலை கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தர்ஷன் நான் இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தேன், அப்போது அவரிடம் என்னுடைய காதலை எப்படி தெரிவிப்பது என்று யோசித்தேன், இதனால் நானும் என் நண்பர்களும் ஒரு கடிதம் எழுதினோம்.
ஆனால் அதை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்த போது, எங்களுக்கு ஆங்கிலம் அப்போது சரியாக தெரியாது என்பதால், தங்கிலீஷில் கடிதம் எழுதினோம், கொடுத்தோம். ஆனால் அவள் என்னை ஒன்சைடாக காதலித்து வந்திருக்கிறாள் என்பது அதன் பின் தான் தெரியும். இப்படி எங்கள் காதல் 10 மாதங்கள் சென்று கொண்டிருக்க, கடிதத்தில் எங்கள் காதல் வளர்ந்தது.
அதன் பின் நான் வெளியில் வந்தவிட, எங்கள் காதல் முடிந்தது, அவள் இப்போ ரஷ்யாவில் திருமணமாகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறாள், எங்கிருந்தாலும் சந்தோஷமாக இரு அபிராமி என்று கூறி முடித்தார்.
அதன் பின் கமெரா முன்பு வந்து பேசிய தர்ஷன், நான் சொன்ன கதை எல்லாம் பொய் என்று அப்படியே மாற்றி பேசினார். அவர் ஷெரீனிடம் அன்பாக காதலை வெளிப்படுத்தியதை கூறினாரா? அல்லது காதல் கதையை பொய் என்று கூறினாரா? என்பது தான் புரியாமல் உள்ளது.