அதிர்ச்சியில் அபிராமி
பிக் பாஸ் சீசன் 3 கடந்த சில நாட்களாக பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சேரன், சரவணன் இடையிலா ச ண்டை, ஐந்தாவது எலிமினேஷனில் நடந்த ட்விஸ்ட், என்று நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில்,
வைல்ட் கார்டு போட்டியாளராக கஸ்தூரி எண்ட்ரியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது இதுவரை நடக்கவில்லை. இந்த நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா வெளியேறியதற்கு முகேன் தான் காரணம்.
அவர் தான், ரேஷ்மாவை எலிமினேட்டுக்காக நாமினேட் செய்தார். அதே சமயம், ரேஷ்மா வெளியேறிய பிறகு அது குறித்து நினைத்து முகேன் வருத்தப்பட்டார்.
இந்த நிலையில், ரேஷ்மாவுக்காக வருத்தப்பட்டு, கதறி அழுத முகேன், தனது கையாளேயே கட்டிலை அடித்து உடைக்கிறார். அவர் முன்னாள் இருக்கும் அபிராமி அதிர்ச்சியில் உரைந்து போகிறார். இந்த காட்சியைக் கொண்ட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
முகேன் ஏன் இப்படி வெறித்தனமாக நடந்துக் கொள்கிறார். அதற்கு அபிராமி தான் காரணமா அல்லது ரேஷ்மா வெளியேறியது காரணமா, என்று ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் எழு, அதற்கான விடை இன்றைய எப்பிசோட்டில் தெரிந்துவிடும் என்பதாலும், இந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.