புதியவர்களின் எப்போ கல்யாணம்!!

949

எப்போ கல்யாணம்

எப்போ கல்யாணம் என்ற படத்தில் மிஸ்.சவுத் இந்தியா பட்டம் வென்ற சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா என 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இதுகுறித்து படத்தை இயக்கும் ஏ.இருதயராஜ் கூறியதாவது..

பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியான வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் பெற்றோரும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர்.

இதற்கு “எப்போ கல்யாணம்” படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம். காதல், சோகம், நகைச்சுவை என நவரசங்களையும் கோர்த்து உருவாக்கி இருக்கும் படம் என்கிறார்.

படத்தில் 4 நாயகிகளுடன் ரஞ்சித் குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்ன மாலா, வினய்பிரசாத், ஐவன், நிர்மலாதேவி, ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயந்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர் இதில் வில்லனாக நடிக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவையும், என்.எஸ்.கிருஷ்ணகுமார் இசையையும் கவனித்துக் கொள்கிறார்கள். கீர்த்தி புரொடக்சன் சார்பில் ஷைலா, டாக்டர் கீர்த்தவணி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.