பொறுப்பில்லாத விஜய்? இப்படியா நடந்துகொள்வது?

995

பொறுப்பில்லாத விஜய்?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவருகிறார். அவரது ரசிகர்கள் அவரை ஒவ்வொரு படத்திலும் நோட்டமிட்டு அவர் செய்யும் செய்கைகளை பின்பற்றி வருகிறார்கள்.

அப்படி இருக்க தான் நடிக்கும் படங்களில் தீங்கை விளைவிக்கும் காட்சிகளில் நடிக்கும் போது ஒரு தடவைக்கு பலதடவை யோசித்து நடிக்கவேண்டுமல்லவா.

அப்படி தான் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சர்க்கார் படத்திலும் அரசாங்கம் கொடுத்த இலவச லேப்டாப், டிவி, மிக்சி , கிரைண்டர் உள்ளிட்டவற்றை நெருப்பில் தூக்கியெறிந்து அதை வீடியோவாக எடுத்தும் இணையத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தனர்.


அந்தவகையில் தற்போது மீண்டும் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனது. அதில் விஜய் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக பைக்கில் செல்கின்றார். இந்த வீடியோவை விஐய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


இதை பார்த்த பலரும் ஹெல்மெட் கூட அணியாமல் ஒரு முன்னணி நடிகர் இப்படியா செல்வது…இதன் மூலம் தன் ரசிகர்களுக்கு தானே தவறான வழி காட்டுவதாகத்தானே அர்த்தம் என்று கூறி வருகின்றனர்.