லட்சுமி மேனன்…
ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லட்சுமி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார்.
கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.
நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஜாலி குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்ளை இன்ப மழையில் நனைய வைத்துள்ளார்.
#LaskshmiMenon Chilling pic.twitter.com/t1CO9ZXNic
— KTown Reporter (@KTownReporter) October 31, 2020