ரம்யா பாண்டியன்…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் Tuff Contestant என்று சீக்கிரமே பேர் எடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். என்னதான் ஜாலியாக இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லி விடுகிறார்.
அதேபோல நேற்று சுசித்ரா இவருக்கு சைலன்ட் கில்லர் என்ற பட்டத்தையும் வழங்கினார்.
இப்படி பல சந்தர்ப்பங்களில் தனது சுயத்தை காட்டி வரும் ரம்யாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம். இந்த நிலையில் ஆரம்பத்தில் சின்னசின்ன மேடைகளில் தனது திறமையை காட்டி இந்த நிலைக்கு வந்துள்ளார்.
தற்போது அவர் கல்லூரி படிக்கும்போது கலந்துகொண்ட விழாவின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி ரம்யா பாண்டியன், சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் “காசு இருந்தா காக்கா கூட கலர் ஆயிடும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.