ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் நடிகையின் புகைப்படங்கள் !

616

ரச்சிதா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

அந்த வகையில், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து சில சூடான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.