அமலாபாலுடன் திருமணம் ஆனது போல புகைப்படங்களை வெளியிட்ட நண்பர்; அவதூறு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி!!

432

அமலாபால்…

தனது நண்பரும், பிரபல பாடகருமான, மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டுத் திருமணம் ஆனது போன்று தோற்றத்தை உருவாக்கியுள்ளதால்,

அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அமலாபால் நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அமலாபால். இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்த அவர் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாடகர் பவ்னிந்தர் சிங், நடிகை அமலாபாலுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பின்னர் அவற்றை சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார்.

தன்னை இணைத்து தவறான ஒரு தகவலை வலைதளங்களில் பரப்பிய முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங்குக்கு எதிராக, அவதூறு வழக்குத் தொடர அனுமதி கோரி நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக மனுவில் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.