நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகியாக நுழைந்து பிறகு நடிகையானவர் ஆண்ட்ரியா. அவர் பற்றி சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை.
இருந்தாலும், அவ்வபோது தான் நடிக்கும் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுபவர், தற்போது சொல்லும்படியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், திருமணமான ஆணுடன் ஆண்ட்ரியா தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த காலத்தை அவர் இருண்ட காலமாக பார்த்ததோடு, அக்காலத்தில் பெரும் சோகத்தில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
தற்போது தனது தகாத தொடர்பினால் ஏற்பட்ட சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதை கவிதையாக எழுதிருக்கும் ஆண்ட்ரியா, ’முறிந்த சிறகுகள்’ என்ற பெயரில் அதை கவிதை தொகுப்பாகவும் எழுதியிருக்கிறார்.
மேலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதித்திருந்தது, என்று கூறியிருக்கும் ஆண்ட்ரியா, நான் திரும்ப வந்துள்ளேன், என்று தான் நடிக்க ரெடியாக இருப்பதையும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.