சூரறை போற்று…
ஒரு தனி ஆள் உருவாக்கும் / உருவாக்கிய சாம்ராஜ்யமே சூரரைப் போற்று படத்தின் கதை. 19 வயதில் ஒடும் ரயிலை மறிக்க கல்லை விட்டெறியும் சிறுவன் எப்படி Deccan Air என்னும் விமான நிறுவனத்தை நிறுவி 1 ரூபாயில் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் நபரையும், கையேந்தி பவனில் கூட கடன் சொல்லும் நபரையும் பக்கத்து பக்கத்து சீட்டில் சரி சமமாக உட்க்கார வைத்து விமானத்தில் பறக்க வைக்கும் முயற்சியே திரைக்கதை.
தமிழ் முதன் முறையாக ஒரு முன்னணி ஹீரோவின் படம் OTTயில் நேரடியாக வெளிவரவுள்ளது என்பதும் எல்லோருக்கும் பொன்மகள் வந்தாள், பெங்குயின் என பல்வேறு காவியங்கள் நினைவில் வர, எல்லாவற்றையும் தகர்த்து எரிந்துள்ளது இந்த சூரறை போற்று.
படத்தின் ஆரம்பத்திலேயே Deccan Air விமானத்தை அத்துமீறி Land செய்கிறார் அதிலிருந்து Take Off ஆகிறது படம்.
நெடுமாறன் ராஜாங்கம் என்னும் ஒரு சாமானியன் எளிய மக்களை முதற்கொண்டு விமானத்தில் குறைந்த பணத்தில் பறக்க வைக்க கனவுடன் போராடி வருகிறார். அந்த கனவை கலைக்க பலர் பல்வேறு வழியாக போராடுகின்றனர். தன்னை போலவே வெறும் கனவை மட்டுமே மூலதனமாக கொண்டு வெற்றி பெற்ற பரேஷ் என்பவரை சூர்யா தனது ஹீரோவாக நினைக்க, அவரே இவரின் முயற்சிகளுக்கு வில்லனாக நிற்கிறார்.
7,8 வருடங்களாக தடம் மாறிய சூர்யாவை மீண்டும் அவர்குறிய பாதையில் திரும்பி வந்துள்ளார். அவர் தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டார், காதல் காட்சிகளிலும் சரி, Emotional காட்சிகளிலும் சரி தனக்கே உரித்தான முத்திரையை பதித்துள்ளார். செம்ம Comeback.
சூர்யாவிற்கு செம்மையாக Tuff கொடுத்துள்ளார் ஹீரோயின் அபர்ணா பாலமுரளி, அவர் மட்டுமின்றி ஊர்வசி, காளி வெங்கட், கருணாஸ், பரேஷ், சூர்யாவின் நண்பர்களாக வரும் துணை நடிகர்கள் என எல்லோரும் படத்தை சரி பாதியாக சுமந்துள்ளார்கள்.
சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று சூர்யாவுக்கு எண்ணம் வரும் காட்சி, அற்புதம். அதோடு தன் தந்தையை கடைசியாக பார்க்கும் தருவாயில், அவரை பார்க்க பணம் இல்லாமல் பயணம் செய்ய முடியாமல் அவர் கெஞ்சும் இடம் சூர்யாவிற்கு செம்ம அப்ளாஸ் கொடுக்கலாம்.
அவ்வளவு பெரிய பிஸினஸ் மேனை உடுப்பி ஹோட்டலுக்கு அழைத்து வந்து விமான பிஸினஸை பற்றி சூர்யா சொல்லும் இடம் தியேட்டராக இருந்தால் விசில் பறந்து இருக்கும்.
இது ஏர் டெக்கான் கோபிநாத்தின் பயோகிராபி என்றாலும், அதை Documentry போல் இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி, இளைஞர்களை ஊக்கவிக்கும் படி திரைக்கதையாக அமைத்தது சுதா கொங்காராவிற்க்கு பெரிய பூங்கொத்து.
சூர்யாவுக்கு பிறகு படத்தை தாங்கி பிடிப்பது ஜி.வி.பிரகாஷின் இசை, ஒளிப்பதிவும் Flightக்குள் இருப்பது போல் ஜில். விஜயகுமாரின் வசனங்கள் தீபாவளி பட்டாசு. எல்லா வருடங்களை போல் இந்த வருடமும் அமைந்தது இருந்தால், இந்த தீபாவளிக்கு இந்த படத்தை Theater-இல் விசில் அடித்து கொண்டாடி இருக்கலாம்.
Plus Points
நடிகர்களின் நடிப்பு
சுதா படமாக்கிய தன்மை
ஜி.வி இசை, ஒளிப்பதிவு
படத்தின் வசனங்கள்
Minus Points
என்னதான் படம் நன்றாக இருந்தாலும் 3:30 மணி நேரம் படம் பார்த்த Feel.