அஞ்சலி…
நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.
எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.
தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் நிசப்தம் படம் ரிலீஸ் ஆனது. ஹீரோயினை மையப்படுத்தும் படங்களுக்கும், தனது கதாபாத்திரத்திற்கும் முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது தனது முன்னாள் காதலர் ஜெய்யை கழட்டிவிட்டு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார் அஞ்சலி. அந்த படத்திற்கு ‘பூச்சாண்டி’ என பெயர் வைத்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் வெளியானது. சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் soldiers film factory சார்பில் ‘பூச்சாண்டி’ படத்தை தயாரித்துள்ளார். கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
Here’s the first look of #POOCHANDI #PoochandiFirstLook👻@directorkj @SoldiersFactory @iYogiBabu @Arunrajakamaraj @twitavvi @dopmaruthu @Composer_Vishal @editorsuresh @SaktheeArtDir @silvastunt @kukarthk pic.twitter.com/sBmjPo1Us2
— Anjali (@yoursanjali) November 9, 2020