நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் விமர்சனம் – சுமாரா ? சூப்பரா ?

712

மூக்குத்தி அம்மன்…

எல்.கே.ஜி படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இவருடன் சரவணன் என்னும் இயக்குனரும் இப்படத்தை இயக்கி உள்ளார்.

தனது மொத்த குடும்பமும், அவர்களை சுற்றி நடக்கும் குழப்பங்களை தீர்ப்பதற்கு திருப்பதி செல்ல விருப்ப படுகிறார்கள். ஆனால் விதி அவர்களை திருப்பதி போகாமல் தடுத்து நிறுத்த, சரி அருகில் இருக்கும்,

தனது குல தெய்வமான மூக்குத்தி அம்மனை தரிசிக்க குடும்பத்துடன் செல்கிறார் Rj பாலாஜி. திடீரென்று கடவுளாக நயன்தாரா அவன் முன் நிற்க இறுதியில் அவர்களின் குழப்பங்களும், கஷ்டங்களும் தீர்ந்ததா இல்லை மேலும் வளர்ந்ததா என்பதே கதை.

பிளஸ் Points !

*இந்த படத்தின் ஒளிப்பதிவாளரான தினேஷ் கிருஷ்ணன் படத்தை காண கன கச்சிதமாக நம்மிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

*கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான சூரரைப்போற்று படத்தில் நம்மை எல்லாம் அழ வைத்த ஊர்வசி இந்த படத்தின் மூலம் நம்மளை சிரிக்க வைத்துள்ளார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் Bouquet.

*நயன்தாராவின் Make Up

*எமோஷனல் காட்சிகள்

*பல உண்மைகளை வெளிப்படையாக எடுத்ததற்கு மிக பெரிய Salute.

மைனஸ் Points :

*எல்லா படத்திலும் நம்மளை அட்லீஸ்ட் புன்னகைக்க வைத்த ஆர் ஜே பாலாஜி, இந்த முறை சற்று பொறுமையை சோதித்து இருக்கிறார். ஆமா படத்தில் வரும் காமெடி காட்சிகள் பெரிதாக ஒட்டவில்லை.

*அமீர்கான் நடிப்பில் 2014ல் வெளியான PK படத்தின் சாயல் Heavy-ஆக அடிக்கிறது. வில்லனின் Get Up உட்பட…

சரி மேட்டர்க்கு வா என்கிறீர்களா ? வரேன் வரேன்… நயன்தாரா வழக்கம் போல் மீண்டும் ஒருமுறை லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்திருக்கிறார். அவர் மீதிருக்கும் தவறான பிம்பத்தை இந்த படத்தின் மூலம் உடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு. அவ்வளவு ஏன் நாளைக்கு அவரை எங்காவது பார்த்தால் இந்த படம் நிச்சயம் நினைவுக்கு வரும்.

ஆக, இந்த படம் ஒரு தபா பாக்கலாம்…