ராஜா ராணி சீரியல் நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர்!!

1096

நடிகை ஸ்ரீதேவி

பல சீரியல்களில் நடித்தாலும் நடிகை ஸ்ரீதேவியை மக்களிடம் கொண்டு சேர்த்தது ‘ராஜா ராணி’ தான். இந்த சீரியலில் வில்லியாக நடித்து கல்லிய ஸ்ரீதேவி, ராஜா ராணி சீரியல் முடிந்த நிலையில், வேறு எந்த சீரியலிலும் ஒப்பந்தமாகாமல் ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில், வார இதழ் ஒன்றின் இணையதளத்திற்கு நடிகை ஸ்ரீதேவி அளித்த பேட்டியில், ”எதிர்ப்பாரத விதமாகத் தான் நான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் எனக்கு நடிப்பை பற்றி எதுவும் தெரியாது.

அப்படி இருக்கும் போது தயாரிப்பாளர் ஒருவர், “நீ ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் உன்னை தூக்கிடுவேன்” என்று மிரட்டினார். அதில் இருந்து தான் நடிப்பை சவாலாக எடுத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

ஐடி துறையில் பணிபுரியும் அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவி, தற்போது தனது கணவருடன் இல் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் புதிய சீரியலோடு ரசிகர்களை சந்திக்கப் போகிறாராம்.