தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் நடிகை வித்யா பாலன். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். அது பலருக்கும் தெரியாது. பேஸ்புக்கிலும் இருக்கிறேன்.
ஆனால் ட்விட்டருக்கு மட்டும் வரவே மாட்டேன். அங்கு வந்து இவர்களுடன் சண்டை போட நான் தயாராக இல்லை” என பேட்டி அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் சிலர் பேக் ஐடிக்கள் மூலம் பலரையும் தரக்குறைவாக பேசுவதை பற்றி தான் அவர் இப்படி கூறியுள்ளார்.