அழகான மகளை கொ ன்றுவிட்டு நடிகை த ற்கொ லை : சிக்கிய கடிதம்!!

1134

பிரசாந்த் பார்கர்

இந்தியாவில் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர், தனது மகளை கொ ன்றுவிட்டு தானும் தற் கொ லை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கல்வாயில், தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் பிரக்ன்யாவின் கணவர் பார்க்கர் காலை Gym-க்கு சென்று 9.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவி பிரக்ன்யா தூ க்கில் தொ ங்கிய நிலையிலும், மகள் ஸ்ருதி ப டுக்கை அறையில் இ றந்த நிலையிலும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பிரக்ன்யா எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் கிடைத்தது. அதில், ‘எனது மகளை கொ ன்றுவிட்டு நான் தற் கொ லை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல’ என்று எழுதப்பட்டிருந்தது.

நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் பிரக்ன்யா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.