80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன்! மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா?

402

மைக் மோகன்…

நடிகர் மைக் மோகனை தமிழ் திரையுலகம் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. வெள்ளிவிழா நாயகன் என்கிற பெயரும் அவருக்கு உண்டு. எண்பதுகளில் மோகன், இளையராஜா, கவுண்டமணி செந்தில், கூட்டணி படங்கள் பட்டையை கிளப்பியது. அது ஒரு பொற்காலம்.

அந்த மோகன் சில விஷமிகள் கிளப்பிய வதந்திகளால் வீட்டில் முடங்கிப் போனார். இபோதும் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞன் தான் மோகன்.

வயது ஐம்பதை கடந்தாலும் இன்னும் அவர் இருபது வயது பையனாகவே வலம் வருகிறார். மேலும், மோகனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் சுரேந்திரன் என்பவர் தானாம். மேலும் ஒரு பேட்டியில் சுரேந்திரன், ‘எனது வாய்சால் தான் மோகன் படங்கள் ஹிட் ஆகின்றன’ என்று கூறி இருந்தாராம். இதனால் மோகனுக்கு ஈகோ பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாம்.

இதனைத் தொடர்ந்து மோகன் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு தன்னுடைய ஒரிஜினல் வாய்ஸில் டப்பிங் கொடுத்தாராம். மேலும் மோகன் கன்னடத்தவர் என்பதால் அவருடைய தமிழ் வாய்ஸ் மக்களிடையே எடுபடவில்லை.

இதனால் மோகன் டப்பிங் வாய்ஸ் கொடுத்த மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்தன. இந்த காரணத்தால் தான் மோகன் அவருடைய தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார்.