இதயம் நொறுங்கியது.. கங்குலியை பிரிந்தது ஏன்? 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த நடிகை நக்மா!!

1205

2003 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது, அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்துவிடுவார். இருவரும் அவ்வப்போது பொது இடங்களுக்கு ஒன்றாக சென்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா. கங்குலிக்கும் எனக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. எங்கள் இருவருக்குமான நட்பும் நெருக்கத்தில் இருந்த சமயத்தில் அவரது விளையாட்டு பாதிக்கப்பட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், எங்களுடைய நட்புதான், கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இதனால் இதயம் நொறுங்கிப்போனது. மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என கூறியுள்ளார்.