மாஸ்டர்…….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் JD என்ற கல்லூரி ஆசிரியர் ரோலில் தளபதி விஜய் நடித்துள்ளார். பக்கா மாஸ் கமெர்ஷியல் ஆக்ஷன் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, மகேந்திரன், சாந்தனு, ஆண்ட்ரியா, சஞ்சீவி, ஸ்ரீமன், ஸ்ரீநாத், தீனா, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் என பலர் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, அனிருத் இசை மற்றும் ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொங்கலுக்கு ரிலீஸாக மாஸ்டர் வருவார் என கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர். மேலும் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாம் படம். அனேகமாக கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டு தினத்தன்று மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவேண்டிய படம். முழு படமும் முடிந்த நிலையிலும் அமேசான் அல்லது நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியிடவில்லை படத்தை. ஏன் என்பது பலரது கேள்வி.
படத்தை தயாரித்துள்ளது விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது XB Film Creators பாணரில் தான். சினிமாவை தனது உயிர் மூச்சாக நினைப்பவர் விஜய். ஏற்கனவே துவண்டு கிடக்கும் தியேட்டர்களை தூக்கி நிறுத்ததும் பொறுப்பு அணைத்து சினிமாக்காரர்களுக்கு உண்டு என விஜய் நினைப்பவர் தான்.
பெரிய ஹீரோ படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் அவர்கள் சம்பளத்துக்கே சென்று விடும். இதுவே வேற பாணர் ஏனில் படம் எப்பொழுதோ ott ரிலீஸ் ஆகியிருக்குமாம். விஜயும் தனது சம்பளத்தை பற்றி இந்த படத்தில் பெரிது படுத்தாதன் காரணத்தால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்க்கு எந்த அழுத்தமும் ஏற்படவில்லையாம். எனவே அவர்கள் பொறுமையாக திரை அரங்க ரிலீசுக்கு காத்திருக்கிறார்கள் என கோலிவுட்டில் விஷயம் அறிந்தவர்கள் கிசு கிசுகிறார்கள்.
அப்போ கார்ப்ரேட் நிறுவனம் தயாரித்திருந்தால் இப்போவே ரிலீஸ் பார்த்திருக்கும் மாஸ்டர். தியேட்டர் ஓனர்கள் நிலையை உணர்ந்து விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எடுத்த இந்த முடிவுக்கு சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள்.