வெளிநாட்டு தமிழர்கள் தான் குறி : அழகை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய இளம் நடிகை : புதிய தகவல்கள்!!

1479

இளம் நடிகை

மோசடி வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுருதி குறித்த அவதூறு தகவல்களை இணைய தளத்தில் இருந்து நீக்குவது குறித்து ஆறு வாரங்களில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

அவரும் வருங்கால மனைவி தானே கேட்கிறார் என பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சுருதி பாலமுருகன் தொடர்பிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை பாலமுருகன் உணர்ந்தார்.

இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் சுருதி, வாடகை தாய் சித்ரா, தந்தை எனப்படும் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே பாணியில் வெளிநாட்டில் வாழும் பல தமிழர்களை சுருதி ஏமாற்றியுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சூழலில் கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள சுருதி, இணையதளங்களில் தன்னை பற்றி புகைப்படங்களுடன் கூடிய அவதூறான செய்தி வெளியாகி உள்ளதாகவும், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுருதியின் கோரிக்கை மனுவை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.