“லவ் பிரேக் – அப்புக்கு இதெல்லாம்தான் காரணம்!” அனிதா சம்பத்

1371

அனிதா சம்பத்

இளம் செய்தி வாசிப்பாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை தக்க வைத்திருப்பவர் அனிதா சம்பத். அவரின் திருமணம் எப்படி நடக்க வேண்டும், லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப், பிரேக் அப் என சகலத்தைப் பற்றியும் இங்கே பேசியிருக்கிறார் அனிதா.

உங்க திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமா இருக்குமா, இல்ல காதல் திருமணமா? “நிச்சயிக்கப்பட்ட திருமணம் இப்போலாம் சாத்தியம் இல்லை. இப்போ இருக்கிற பெண்கள், ஆண்களுக்குச் சமமான சுதந்திரத்தை விரும்புறாங்க. அவங்க புகுந்த வீட்டிலேயும் இந்தச் சுதந்திரத்தை எதிர்பார்ப்பாங்க. இப்போதெல்லாம் பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, அவங்களுடைய உரிமைக்காக நிறைய போராட வேண்டியதா இருக்கு. நிச்சயிக்கப்பட்ட திருமணத்துல ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு நடக்குறது ரொம்ப கஷ்டம். எந்தச் சூழ்நிலையிலேயும் நான் அட்ஜஸ்ட் பண்ணிடுவேனு சொல்றவங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஓகே.”

லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
எந்தக் காலத்திலும் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்புக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன். இந்த விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் நம்ம கொஞ்சம் பிற்போக்குத் தன்மையோட யோசிக்கறோமோனுகூட நினைச்சது உண்டு. ஆனா, என்னால லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் பற்றி யோசிக்கக்கூட முடியாது.

முக்கியமா எந்தப் பெற்றோர்களும் அவங்க பசங்க லிவிங் டு கெதரில் இருக்கிறதை விரும்ப மாட்டாங்க. இந்த விஷயத்தில் பசங்கதான் பெற்றோர்களை ஏமாத்துறாங்கனு தோணுது. அதுமட்டுமல்லாம லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்குறவங்க தன்னையும், சமூகத்தையும், பெற்றவர்களையும் ஏமாத்திட்டு இருக்காங்க.

ஒருத்தரை மனசால ஏத்துக்கிட்டு அவங்ககூட வாழ நினைக்கிறதுக்கு எதுக்கு லிவிங் டு கெதர்? அதுக்கு கல்யாணம் பண்ணியே வாழ்ந்திடலாமே… எப்போ வேணாலும் பிரிஞ்சிடலாம்ங்கிற நோக்கத்துடன்தான் இவங்க பழகவே ஆரம்பிக்கிறாங்க.

கல்யாணங்கிற விஷயத்தை ரொம்ப ரகசியமா, முன்கூட்டியே முயன்று பார்க்கிற ஒரு முட்டாள்தனமான ஹார்மோன் ஆர்வக்கோளாறாதான் இந்தக் குறிப்பிட்ட ரிலேஷன்ஷிப்பையே பார்க்குறேன். இன்னும் சுருக்கமா சொன்னா சின்ன குழந்தைகள் அம்மா, அப்பா விளையாட்டு விளையாடுற மாதிரிதான் நான் பார்க்குறேன்.

உங்களுக்கு ஒரு காதலர் இருந்தால் அவர்கிட்ட எந்த மாதிரியான குணாதிசயங்கள் இருக்கணும்னு நினைக்கிறீங்க?
எப்படி இருக்கணும்னு நினைக்கிறதைவிட எப்படி இருக்கக்கூடாதுனு முதலில் சொல்லிடுறேன். போனில் அடிக்கடி ‘நீ சொல்லு… அப்புறம் என்ன…’னு கேட்டு மொக்க போடுற பையனா இருக்கக்கூடாது.

சினிமாத்தனமான காதலாகவும் இருக்கக்கூடாது. ஏன்னா, இந்த மாதிரியான காதல் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. பபுள்காம் மாதிரி முதலில் ஸ்வீட்டா இருக்கும். அப்புறம் எப்போடா கீழே துப்புவோம்னு காதல் இருக்கக்கூடாது.

அதிகமான பிரேக் அப் எதனால நடக்குதுனு நினைக்கிறீங்க?
“கம்ப்யூட்டர்கூட அப்போ ரெஃப்ரெஷ் பண்ணலைனா ஹேங் ஆகிரும். அப்போ உறவுமுறை ஹேங் ஆகாதா என்ன… நம்மகூட இருக்கிற லவ்வருக்கு அப்போ அப்போ குட்டி குட்டியா ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்துக்கிட்டே இருக்கணும்.

இதைவிட முக்கியமா நம்ம ஃபேவரைட் இடத்துக்கு அடிக்கடி போயிட்டு வரணும். பழைய நினைவுகளைப் பற்றிப் பேசணும். இதெல்லாம் பண்ணாம இருக்கும்போதுதான் அடிக்கடி ச ண்டை, வா க்குவாதம், ச ந்தேகம் எல்லாம் வந்து பிரேக் அப் நடக்குது.

உங்களுடைய ஃபேன்ஸ் யாராவது உங்களுக்கு புரொபோஸ் பண்ணியிருக்காங்களா? நான் எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவா இருப்பேன். எனக்கு இன்பாக்ஸ்ல வர்ற எல்லா மெசேஜையும் முடிந்தளவுக்குப் படிச்சிட்டு பதிலும் அனுப்புவேன். நிறைய பேர் அக்கா நீங்க நல்லா செய்தி வாசிக்கிறீங்கனு… ஒரு அக்காவாதான் மெசேஜ் பண்ணுவாங்க. ரொம்ப கண்ணியமாகத்தான் அனுப்புறாங்க. என்னை கிரஷ்ஷா (crush) பார்க்கிறவங்க ரொம்ப கம்மி. அக்காவா பார்க்கிறவங்கதான் அதிகம். ‘ஐ லவ் யூ அக்கா’ங்கிற மெசேஜ்தான் என் இன்பாக்ஸ்ல நிரம்பி வழியும்” என்று சிரிக்கிறார் அனிதா சம்பத்.