முகத்தில் அறைந்தாரா முகேன்?
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வெறும் 1.30 மணிநேர நிகழ்வை மட்டும் தான் பார்க்கும் பார்வையாளர்களுக்கு காட்டுகின்றனர், பிக்பாஸ் நிர்வாகத்தினர்.மீதி நடக்கும் விஷயங்களில், பல சுவாரஸ்யம் இல்லாததினாலும் சில விஷயங்கள் சஸ்பென்ஸை உடைத்துவிட போகிறது என்பதினாலும் ச ர்ச்சைக்குள்ளாக போகிறது என்பதினாலும் மறைக்கப்படுகிறது.
அப்படிதான் இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ள வனிதாவை முகேன் முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அதனை இதுவரை வெளிவந்துள்ள எந்தவொரு ப்ரோமோவிலும் காட்டப்படவில்லை.
வழக்கம்போல் இதையும் சர்ச்சை விஷயமாக பிக்பாஸ் மறைத்துவிட்டாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சி பார்த்தால் தான் தெரியவரும்.
மேலும், முகேன் ஷார்ட் டெம்பர் என்பதால் இந்த நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளது. ஏனெனில் வனிதாவும் வந்ததிலிருந்து முகேனையும் அபிராமியையும் சீ ண்டியப்படியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.