பிச்சைக்காரி ரோல்ல நடிக்கச் சொன்னாலும் தயங்கமாட்டேன் : ஜாக்குலின் அதிரடி!!

1246

ஜாக்குலின்

“சில நடிகைகள் 35 வயசுலகூட ஸ்கூல் டிரெஸ் போட்டு நடிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தக் கேள்வியை கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. ஸோ, கல்யாணப் பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு” எனக் கலாயாக ஆரம்பிக்கிறார் சீரியலில் கமிட்டாகியிருக்கும் ஜாக்குலின்!

`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் ஜாக்குலின். அதன் பிறகு, நயன்தாராவின் தங்கையாக `கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். சினிமாவிலே நடித்திருந்தாலும் சீரியலில் நடிக்கும் ஆசையும் ஜாக்குலினுக்கு இருந்தது. அந்த ஆசையை `தேன்மொழி பி.ஏ’ என்கிற புது சீரியலின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். பிஸி மோடில் இருந்தவரை நேர்காணலுக்காகச் சந்தித்தேன்.

“திடீர்னு ஒரு நாள் விஜய் டி.வி சேனலில் இருந்து சந்துருனு ஒருத்தர் போன் பண்ணி, `புது சீரியல் ஆரம்பிக்கப்போறோம். அதுல நடிக்க உங்களுக்கு ஓ.கேவா’னு கேட்டார். ஆரம்பத்துல விருப்பம் இல்லைனு சொன்னேன். அப்புறம், `யோசிச்சு பதில் சொல்றேன். இரண்டு நாள்கள் டைம் கொடுங்க’னு கேட்டேன்.

இந்த சீரியல் `நிம்க்கி முக்கியா’ (Nimki Mukhiya) என்கிற இந்தி சீரியலுடைய ரீமேக். முதல்ல தயக்கத்தோட இருந்தேன். அப்புறம், சீரியலுடைய புரோமோ பார்த்ததும் ஆசை வந்திடுச்சு. `எதுக்குமே கவலைப்படாம ஜாலியாக சிரிச்சிட்டே இருப்பா. குழந்தைத்தனம், எதையும் சீரியஸா எடுத்துக்காத கேரக்டர்’னு சொன்னதும் என் அம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. `இது உனக்கு நல்ல வாய்ப்பு. அதுவும் லீடு ரோல். நிச்சயம் உனக்கு நல்ல ரீச் கிடைக்கும்’னு சொல்லி என்னை உற்சாகப்படுத்தினாங்க.

`ஆண்டாள் அழகர்’ இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன் சார்தான் இந்த சீரியலையும் இயக்குறார். ஆரம்பத்துல எனக்குதான் கஷ்டமா இருந்தது. அது ஓவர் ஆக்ட் பண்ற மாதிரியான கேரக்டர். நான் அந்த அளவுக்கு ஓவர் ஆக்ட்லாம் பண்ணமாட்டேன். அந்த கேரக்டருக்குத் தகுந்த மாதிரி என்னை மாற்றியது இயக்குநர்தான். இந்த சீரியலுக்கான புரோமோ ஷூட் வித்தியாசமா இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும், நல்லா இருக்குனு சொன்னதும், எனக்கு இன்னும் சந்தோஷமாகிடுச்சு. அதுக்கப்புறம் சீரியலுடைய சில எபிசோடுகளைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப நெருக்கமாகிடுச்சு. அடுத்த நாளே ஓ.கே சொல்லிட்டேன். காஸ்டியூம் போட்டப் பிறகு இன்னும் ஆத்மார்த்தமா உணர ஆரம்பிச்சிட்டேன்.”

சீரியலுடைய ஆரம்பத்துலேயே கல்யாண கெட்டப்ல நடிக்கிறீங்க… வெளியில என்ன பேசிக்கிறாங்க?
“சில நடிகைகள் 35 வயசுலகூட ஸ்கூல் டிரெஸ் போட்டு நடிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தக் கேள்வியை கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. கல்யாண பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு. பிச்சைக்காரியா நடிக்கச் சொன்னாலும் எந்தத் தயக்கமும் இல்லாம நடிப்பேன்.”

“நடிப்புல பிஸி ஆகிட்டீங்க. வி.ஜேவா மறுபடியும் வருவீங்களா?”
“நிச்சயமா வருவேன். நான் கேட்கிறதுக்கு முன்னாடியே, `நடிக்க வந்துட்டோம்ங்கிறதால, உனக்குப் பிடிச்ச வி.ஜே வேலையை விட்டுடாதே’னு டீம்லேயும் சொல்லிட்டாங்க. என்ன வேலை வந்தாலும் என்னைப் பலருக்கும் அடையாளம் தெரிஞ்சது வி.ஜேவாதான். அதனால, எப்பவும் அதை விடமாட்டேன்” எனத் தனது டெம்ப்ளேட் சிரிப்போடு பேசி முடித்தார், ஜாக்குலின்.