கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்த நடிகை ஷிவானி, சீரியல் துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். காரணம் என்ன என விசாரிக்கையில் கிடைத்த தகவல் இதுதான்..
பகல் நிலவு சீரியலில் ஷிவானி-அசீம் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தான் அதே ஜோடியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் உடனே துவங்கினார்கள்.
சிறிய இடைவெளி எடுத்து ஓய்வெடுத்த பிறகு அடுத்த சீரியலில் நடிக்கலாம் என்று தான் ஷிவானி எண்ணினாராம். ஆனால் சேனல் தான் அவரை வற்புறுத்தி நடிக்க வைத்ததும்.
வேண்டாவெறுப்பாக நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது சின்ன பிரச்சனை ஏற்பட்டதால் உடனே விலகிவிட்டாராம் ஷிவானி.
இந்த சீரியலில் நடிக்கும் ஒருவரிடம் ஏற்பட்ட சண்டையால் தான் ஷிவானி வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.