நடிகர் ரித்தீஷ் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

1193

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜே.கே ரித்தீஷ். இவர் இலங்கையின் கண்டியில் பிறந்தவராவார்.

திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 2009 மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ரித்தீஷ் வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இணைந்த ரித்தீஷ் கட்சி பணியாற்றி வந்தார்.

மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணியில் ஈடுபட்டு வந்த ரித்தீஷுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில், ஒரு நல்ல தம்பியை நான் இழந்துவிட்டேன், ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

நடிகர் விஷால் கூறுகையில், ஜே.கே ரித்திஷ் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது, ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.