அன்று கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை : கண்ணீருடன் நடிகை கீதா!!

1063

கண்ணீருடன் நடிகை கீதா

ஒருநாள் தன்னை பார்க்க நிச்சயம் சுதந்திரம் வருவான் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீதா. கடந்தாண்டு சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயிலிருந்து தொப்புள்கொடியுடன் பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டது.

பிறந்து 2 மணிநேரங்களேயான அக்குழந்தையை மீட்ட நடிகை கீதா ”சுதந்திரம்” என பெயர் சூட்டினார். தன் மகளுக்கு திருமணமாகி ஒரு ஆண்டாகியும் குழந்தை இல்லாததால் அவரே வளர்க்க ஆசைப்பட்டார்.

ஆனால் அதற்கு சட்ட திட்டங்கள் இடம் கொடுக்காததால் அரசின் பார்வையில் காப்பகத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார் கீதா.

இவரது சேவையை பாராட்டி அரசு வேலை ஒன்றும் கிடைத்தது, ஆம் சுதந்திரம் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே இவருக்கு வேலை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சுதந்திரம் தத்துக் கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டும் கடந்து விட்டது.

மேலும் குழந்தையை பற்றி எந்த தகவலும் இல்லாமல் ஏங்கும் கீதா என்றாவது ஒருநாள் தன்னை பார்க்க வருவான் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறாராம்.