பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 55 வது நாளை தாண்டிவிட்டது. இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த 9 வது வாரத்தில் நாமினேசனில் மதுமிதா, அபிராமி, லாஸ்லியா ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மதுமிதா நேற்று த ற்கொ லைக்கு முயன்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரம் மீண்டும் உள்ளே வந்த வனிதா, அபிராமி முகென் காதல் கதையில் மதுமிதாவை தனக்கான ஆயுதமாக பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டை ஆண் பெண் என இரு பிரிவாக பிரித்துள்ளார்என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் அவர் பிரச்சனையை தூண்டிவிட்டதால் வத்திக்குச்சி வனிதா என பட்டப்பெயர் வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் அபிராமி குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.