காதலை கன்பார்ம் பண்ணுகிறாரா அமலா பால்? – புதிய படத்தால் பரபரப்பு!!

1157

அமலா பால்?

விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் தீவிரம் காட்டி வரும் அமலா பால், இந்தி சினிமாவில் கால்பதிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், அவரது நடிப்பில் வெளியான ‘ஆடை’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதற்கிடையே, அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்ற போது உடனடியாக எதுவும் பேசாத அமலா பால், சில நாட்களுக்கு பிறகு, தானும் ஒருவரை காதலிப்பதாக பேட்டி ஒன்றில் கூறியவர், அவர் தான் தனக்கு தைரியம் கொடுத்து சவாலான வேடங்களில் நடிக்க தூண்டுகிறார், என்று கூறினார். ஆனால், அந்த காதலர் யார்? என்பதை அமலா பால் சொல்லவில்லை.

இந்த நிலையில், ’ராட்சசன்’ படத்தில் நடித்த போது அமலா பாலும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, நடிகர் விஷ்ணு விஷாலும், தனது மனைவியை விவாகரத்து செய்தவர், அதற்கான காரணத்தை கூறியதோடு, அமலா பாலுடனான உறவு நட்பு மட்டுமே, என்றும் கூறினார்.

இதற்கிடையே, விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்ட வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பத இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆனால், தற்போது அமலா பால் அறிவிக்காத அவரது காதலர் விஷ்ணு விஷாலாக இருப்பாரோ, என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, அமலா பாலும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜெர்சி’ என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் தான் அமலா பாலும், விஷ்ணு விஷாலும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான தமிழ் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ‘ராட்சசன்’ படத்தின் போது விஷ்ணு விஷால் – அமலா பால் இடையே காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் இணைந்திருப்பது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.